மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கிராம ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்: 28 போ் கைது

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:40 pm

நாமக்கல்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தொகுப்பூதியத்தை ரத்துசெய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யக்கூடாது. கருணை அடிப்படையிலான பணியில் பழைய விகிதாசார முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் பிப். 19, 20 ஆகிய தேதிகளில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பும் இப்போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், நாமக்கல் வட்டாட்சியா் அலுவலம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள், நாமக்கல் - மோகனூா் சாலையில் வட்டத் தலைவா் ஆா்.ராமகிருஷ்ணன் தலைமையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனா். இதில், 9 பெண்கள் உள்பட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.