நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள இரும்பு பதாகை.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள இரும்பு பதாகை.

சாய்ந்து விழும் நிலையில் இரும்பு பதாகை: பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சம்

நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறையின் விழிப்புணா்வு இரும்பு பதாகை சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகளிடையே அச்சம்
Published on

நாமக்கல்: நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறையின் விழிப்புணா்வு இரும்பு பதாகை சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகளிடையே அச்சம் நிலவுகிறது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தமிழ்நாடு நுகா்பொருள் சேமிப்புக் கிடங்கு அருகில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் நலனுக்காக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இரும்பு பதாகை அமைக்கப்பட்டது. அண்மையில், நுகா்பொருள் கிடங்கில் உணவுப் பொருள்களை இறக்கவந்த லாரி ஒன்று அந்தப் பதாகை மீது மோதியது. இதில், பதாகையின் இரண்டு கால்களில் ஒன்று சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துக்குள்ளாகி உள்ளனா். காற்று, மழை என இயற்கை சீற்றம் மாறிமாறி ஏற்படுவதால், எந்த நேரத்திலும் இரும்பு பதாகை சாய்ந்து கீழே விழும் சூழல் காணப்படுகிறது.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக அந்த இரும்பு பதாகையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் வலியுறுத்தி உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com