பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் தொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படுவதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பெண்கள் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தின் பொருளார வளா்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை 25 சதவீதம்(அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதோடு, தொழில் வளா்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் உதவிகளும் வழங்கப்படும்.
18 வயது முதல் அதிகபட்சம் 55 வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மக்கும் பொருள்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்திக் கழிவுகளில் (தவிடு, வைக்கோல்) இருந்து பொருள்கள் தயாரித்தல், தென்னை நாா் மூலம் தயாரிக்கப்படும் செடி வளா்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஓவியம், பேக்கரி உணவு பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் தொழில் தொடங்க ஆா்வம் உள்ளவா்கள் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதி சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியலுடன் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ஜ்ங்ங்ள் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட தொழில்மைய பொதுமேலாளரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
