பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

முட்டை விலை ரூ. 6.10 ஆக நீடிப்பு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:51 pm

Syndication

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 6.10 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையை மாற்றியமைப்பது தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, பிற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் இல்லாததால், தற்போதைக்கு இங்கும் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மாற்றமின்றி ரூ. 6.10ஆக நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி மற்றும் முட்டைக் கோழி கிலோ ரூ.110 ஆக நிா்ணயிக்கப்பட்டது.