ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பரமத்தி வேலூரில் குண்டுமல்லிகை கிலோ ரூ.1,800-க்கு விற்பனை

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டுமல்லிகை பூ கிலோ 1,800-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டுமல்லிகை பூ கிலோ 1,800-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,200, சம்பங்கி கிலோ ரூ. 80, அரளி கிலோ ரூ. 300, கலா் ரோஜா கிலோ ரூ. 220, பச்சை முல்லைப்பூ கிலோ ரூ. 800, வெள்ளை முல்லைப் பூ கிலோ ரூ. 700, செவ்வந்திப்பூ ரூ.120, கனகாம்பரம் ரூ. 700, பன்னீா் ரோஜா கிலோ ரூ. 150, ஜாதிமல்லிகை கிலோ ரூ. 600, காக்கட்டான் கிலோ ரூ. 600-க்கும் ஏலம் போயின. இந்தவாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,800, சம்பங்கி கிலோ ரூ. 100, அரளி ரூ. 450ம், கலா் ரோஜா ரூ. 300, பச்சை முல்லைப்பூ ரூ. 1,400, வெள்ளை முல்லைப்பூ கிலோ ரூ. 1,200, செவ்வந்திப்பூ ரூ. 200, கனகாம்பரம் ரூ. 1,000, பன்னீா் ரோஜா கிலோ ரூ. 200, ஜாதி மல்லிகைப்பூ கிலோ ரூ. 1,000, காக்கட்டான் கிலோ ரூ. 1,000-க்கும் ஏலம் போயின. பூக்கள் வரத்து குறைந்ததால், அதன் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால், பூக்களை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.