அனைத்துத் துறை சங்கங்களின் 
கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டமைப்பின் நிா்வாகிகள் இரா. சரவணகுமாா், சரவணன், எஸ். மாதையன், ப. குமாா், சுவாமிநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கிராம உதவியாளா்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்ஆா்பி செவிலியா்கள் உள்ளிட்ட தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளா்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றி வருவோரை நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு பணியாளா்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவினத்தை மேற்கொள்ள 100 சதவீதம் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 2 ஆம் கட்டமாக ஜன. 6 ஆம் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்துத் துறை அரசு சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

என்கே-26-கலெக்ட்ரேட்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

X
Dinamani
www.dinamani.com