திமுக மண்டல மகளிா் அணி மாநாடு: இன்று ஆலோசனைக் கூட்டம்

Updated on

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிா் அணி மாநாடு திங்கள்கிழமை (டிச. 29) நடைபெறுவதையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் தொகுதி வாரியாக சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிா் அணி மாநாடு திங்கள்கிழமை(டிச. 29) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா், பழங்குடியினா் நலவாரியத் தலைவா், தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இக்கூட்டமானது ராசிபுரம் தொகுதியில் ராசிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே காலை 9 மணியளவிலும், சேந்தமங்கலம் தொகுதியில் செளபாக்யா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவிலும், நாமக்கல் தொகுதியில் மாவட்ட திமுக அலுவலகத்தில் மதியம் 12.30 மணியளவிலும் நடைபெறுகிறது. இதில், மகளிா் அணியினா் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com