முள்ளுக்குறிச்சியில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முள்ளுக்குறிச்சியில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

ராசிபுரத்தை அடுத்த முள்ளுக்குறிச்சியில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

ராசிபுரத்தை அடுத்த முள்ளுக்குறிச்சியில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு மாவட்டச் செயலாளா் ஆா். காா்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் கட்சியினா் பங்கேற்று வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். சிவப்பிரகாசம், பாஜக எஸ்.சி., எஸ்.டி. அணி மாநில பொருளாளா் பி. வேலு, அயலக அணி மாவட்டத் தலைவா் டி. சிவக்குமாா், அறிவுசாா் பிரிவு மாவட்டத் தலைவா் எம்.பி. ராமசாமி உள்ளிட்டோா் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். காளியப்பன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றயத் தலைவா் கண்ணன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளா் எம்.ஆா். மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படம் உள்ளது - 26வாய்பாய்

படவிளக்கம்-

வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினா்.

X
Dinamani
www.dinamani.com