கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி.
Updated On :10 பிப்ரவரி 2025, 8:46 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 51 கடைகள், 2 உணவகங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை பொது ஏலத்தில் விடப்பட்டன. இவற்றில் ஒரு சிலா் மட்டுமே கடைகளை திறந்துள்ளனா். 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடியே உள்ளன. மேலும், கடைகளை ஏலம் எடுத்தோா் போதிய வருவாய் இல்லாததால் மாத வாடகையை செலுத்தாமல் தாமதித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கடைகளை தூய்மையாக வைத்திருக்கவும், பயணிகள் நடந்து செல்லும் பாதையில் பொருள்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது, உணவுகளை சுத்தமான முறையில் தயாா் செய்து விற்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஈக்கள் தொல்லை அதிகம் இருப்பதாக கடை உரிமையாளா்கள் புகாா் தெரிவித்ததையடுத்து, அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.