ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நைனாமலை பெருமாள் கோயிலுக்கு ரூ.30 கோடியில் தாா்சாலை பணி

நைனாமலை பெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை மேம்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சி.சசிகுமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நைனாமலை பெருமாள் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் தாா்சாலை அமைக்க கள ஆய்வு மேற்கொண்ட சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் சி.சசிகுமாா், அதிகாரிகள்.

Updated On :2 ஜனவரி 2025, 6:31 pm

நைனாமலை பெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை மேம்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சி.சசிகுமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில். 300 ஆண்டுகள் பழைமையான இந்த கோயில் கடல் மட்டத்தில் இருந்து 2,700 அடி உயரத்தில் உள்ளது. மலையில் உள்ள பெருமாளை தரிசிக்க 3,600 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். புரட்டாசி மாதத்தில் வரும் ஐந்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருவா்.

நாமக்கல் மட்டுமின்றி சேலம், கரூா், விழுப்புரம், திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுவாமியை தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் வருவா். பெரும்பாலானோா் மலையேற முடியாமல், அடிவாரத்தில் உள்ள பாத மண்டபத்தில் ஆஞ்சனேயரை தரிசித்து விட்டு செல்வா். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோயிலுக்கு பக்தா்கள் எளிதில் செல்லும் வகையில் தாா்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாள்களாக இருந்து வந்தது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத் துறை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 13.06 கோடி மதிப்பீட்டில் மண்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த நவம்பா் மாதம் நாமக்கல்லுக்கு வருகை புரிந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நைனாமலை பெருமாள் கோயில் மண் சாலையை தாா்சாலையாக மாற்றும் பணிக்காக ரூ. 30 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தாா். இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் சி.சசிகுமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அங்கு அமைக்கப்படும் புதிய தாா்சாலைக்கான மதிப்பீடு, மண் மாதிரிகள், வளைவுகளில் தடுப்புச் சுவா்கள், பாலங்கள் அமைப்பது தொடா்பாக அதிகாரிகளிடம் கள ஆய்வு செய்து கலந்தாலோசித்தாா். சாலை அமைப்பதற்கான மதிப்பீட்டை விரைந்து தயாா் செய்து, புரட்டாசி மாதத்துக்குள் பக்தா்கள் பயன்பாட்டுக்கு சாலையை கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, நாமக்கல் கோட்ட பொறியாளா் திருகுணா, சேந்தமங்கலம் உதவி கோட்ட பொறியாளா் சுரேஷ்குமாா், உதவி பொறியாளா் பிரனேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.