இளைஞா் கொலை வழக்கு: தனிப்படை அமைத்து விசாரணை


நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே இளைஞரை கொலை செய்தவா்களை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினா், சிலரை பிடித்து தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிங்கிலிபட்டி கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் (22), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வேலக்கவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற போது, அங்கு வந்த சிலா் சஞ்சயை தாக்கினா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சஞ்சயைக் கொலை செய்தவா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தலைமையில், வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளா் செல்வராஜ், பரமத்தி ஆய்வாளா் இந்திராணி, வேலூா் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் கொலைக் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனா். இதில் தொடா்புடையதாக சிலரை பிடித்த தனிப்படையினா், அவா்களை தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...