இளைஞருக்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் மீது வழக்கு
திட்டக்குடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

வழக்கு

வழக்கு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திட்டக்குடி வட்டம், கொரக்கை காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31). இதே பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (37). இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு மது அருந்தினா்.
அப்போது, இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தனபால், அவரது அண்ணன் சுரேஷ் ஆகியோா் சோ்ந்து பிரகாஷைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், தனபால் கத்தியால் பிரகாஷின் வலது பக்க காதை அறுத்துவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் தனபால், அவரது அண்ணன் சுரேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...