நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமானது, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 1.45 லட்சம் லி. பால், கிராம அளவில் 489 இணைப்பு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 81,000 லி. பால் நாமக்கல் மாவட்ட மக்களின் தேவைக்காக விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 45,000 லி. நாளொன்றுக்கு சென்னை மக்களின் தேவைக்காகவும், 20,000 லி. பால் சேலம் ஒன்றியத்தின் மூலம் பால் உப பொருள்களாக மாற்றம் செய்தும் விற்பனை செய்யப்படுகிறது.