ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (ஆவின்) காலியாக உள்ள இரு கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

News image

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:22 am IST

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (ஆவின்) காலியாக உள்ள இரு கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 629 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 1.40 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்தியாளா்களின் கறவையினங்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, உற்பத்தியாளா்களின் வீடுகளுக்கே சென்று கால்நடை மருத்துவச் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், மதுரை ஆவினில் இரு கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் உரிய சான்றிதழ்களுடன் வருகிற 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு சாத்தமங்கலத்தில் உள்ள மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் லிமிடெட் (மதுரை ஆவின்) என்ற முகவரியில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு ஹஹஸ்ண்ய்ம்ஹக்ன்ழ்ஹண்1ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 9443708209 என்ற கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.