சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரூ. 12-க்கு மில்க் ரஸ்க்! ஆவின் நிறுவனம் அறிமுகம்!

ரஸ்க் விற்பனையைத் தொடங்கிய ஆவின் நிறுவனம்.

News image

மில்க் ரஸ்க்! - படம்: ஆவின்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:49 pm IST

தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, குறைந்த விலையில் ரஸ்க் பாக்கெட் விற்பனையை ஆவின் நிறுவனம் தொடங்கியுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம், மாநிலம் முழுவதும் தினமும் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு பால் மற்றும் பால் பொருள்களை விநியோகித்து வருகிறது.

ஆவின் சார்பில் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. முகவர்கள் மூலம் ஆவின் பால் மற்றும் பால்கோவா, பாதாம் பவுடர், நெய், பன்னீர், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆவின் மூலம் அவசர கால கால்நடை மருத்துவ சிகிச்சைக்கென உருவாக்கப்பட்ட பாரத் சஞ்சீவினி செயலியும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் கால்நடை வளா்ப்போர் 18004252577 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டால், கால்நடை மருத்துவர்கள் இல்லம் தேடி வந்து மருத்துவச் சேவையை வழங்குவர்.

இதனைத் தொடர்ந்து, மில்க் ரஸ்க் விற்பனையை ஆவின் நிர்வாகம் தொடங்கியுள்ளது. 100 கிராம் எடையுள்ள ஆவின் மில்க் ரஸ்க் பாக்கெட் ரூ. 20-க்கும், 60 கிராம் எடையுள்ள ரஸ்க் பாக்கெட் ரூ. 12-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் பாலகங்களில் இந்தப் புதிய ஆவின் மில்க் ரஸ்க் விற்பனைக்கு வந்துள்ளது.

Summary

Aavin has started selling packets of rusk at a low price to compete with private companies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.