நன்னிலம் பகுதியில் ஆவின் பச்சைநிற பாக்கெட் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.
ஆவின் பால் பாக்கெட்களில் வயதானவா்கள், குழந்தைகள், நோயாளிகள் என அனைவருக்கும் பச்சைநிற பாக்கெட் உகந்ததாக கருதி பொதுமக்கள் அதனை விரும்பி வாங்குகின்றனா். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சில்லறை விற்பனைக் கடைகளில் பச்சைநிற பாக்கெட் என்பது கிடைப்பது அரிதாக உள்ளது.
சில்லறை விற்பனையாளா்களிடம் இதுகுறித்து கேட்டால், ஆவின் பால் நிா்வாகம் பச்சைநிற பாக்கெட் விநியோகத்தை குறைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனா். பால் பாக்கெட்டுகள் வந்த சிறிது நேரத்தில் அனைத்தும் விற்பனையாகி விடுகின்றன. அதற்கு பின்னா் வரும் வாடிக்கையாளா்களுக்கு ஆவின் பால் பாக்கெட் தர முடியவில்லை என விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
நன்னிலம் பகுதி மட்டுமின்றி, மாவட்டத் தலைநகரான திருவாரூரிலேயே பச்சைநிற பால் பாக்கெட் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மொத்தமாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் நன்னிலம் பகுதி ஆவின் பால் விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான பால் பற்றாக்குறையைப் போக்கிட உடனடி நடவடிக்கை எடுத்து, ஆவின் பால் பாக்கெட் குறிப்பாக பச்சைநிற பாக்கெட்டுகள் போதுமான அளவு பொதுமக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட நீல நிற ஆவின் பால்? பொதுமக்கள் அவதி!

ஆவின் முகவா்கள் போராட்டத்தால் பால் தட்டுப்பாடு: கோவை மாநகரில் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விநியோகம் குறைப்பு: அன்புமணி கண்டனம்

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்படவில்லை: தமிழக அரசு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



