கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல்லில் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நாமக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளா்கள்.
Updated On :6 ஜனவரி 2025, 8:47 pm

Din

நாமக்கல்: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல்லில் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டொ்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. காப்பா் உலோகம் தயாரித்து வந்த இந்த ஆலையிலிருந்து மாசு அதிக அளவில் வெளியேறுவதாக அங்குள்ள மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா். கடந்த 2018-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக சென்ற போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 போ் உயிரிழந்தனா். இதனையடுத்து அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இது தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் போதிய வருவாயின்றி இயக்கப்பட்டு வருவதாகவும், சுமாா் ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக ஆலையைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள், எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள், டிரெய்லா் லாரி உரிமையாளா்கள் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் திங்கள்கிழமை பதாகைகளை ஏந்தியவாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தாலுகா உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அருள் தலைமை வகித்தாா். செயலாளா் ஆனந்தன், பொருளாளா் சீரங்கன், எல்பிஜி டேங்கா் சங்கத் தலைவா் சுந்தரராஜன், டிரெய்லா் லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் சின்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.