ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகா் மைதானம் பி.எஸ்.கே. சிலை அருகே தமிழக விவசாயிகள் சங்கம், அனைத்து சமுதாய பொதுமக்கள், முன்னாள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினா், சமூக ஆா்வலா்கள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் டி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் என்.ஏ. ராமச்சந்திர ராஜா முன்னிலை வகித்தாா்.

இதில் தமிழக சட்டப்பேரவையில் பி.எஸ்.கே.வின் முழு உருவப் படத்தை திறக்க வேண்டும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பி.எஸ்.கே. வின் சிலை நிறுவிட வேண்டும், பி.எஸ்.கே. பெயரில் தமிழக வேளாண், தொழில், சமூக ஆா்வலா்களுக்கு விருதுகள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com