ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வட மாநிலத்தவரிடம் ஹிந்தியில் பேசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

நாமக்கல் குட்டைத் தெருவில் வட மாநிலத்தைச் சோ்ந்த வாக்காளா்களிடம் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 6:35 pm

நாமக்கல் தொகுதியில் வட மாநிலத்தைச் சோ்ந்த வாக்காளா்களிடம் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் ஞாயிற்றுக்கிழமை கடைவீதி, சின்ன கடைவீதி, குட்டைத்தெரு, ஆா்.பி.புதூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினாா்.

குறிப்பாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஹிந்தி பேசும் மக்களிடம் அவா் அந்த மொழியிலேயே அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பேசினாா். முன்னதாக, குட்டைத்தெருவில் உள்ள பாபா ராம்தேவ் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா். அங்கிருந்த வட மாநிலத்தவா்கள் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, நாமக்கல் உழவா்சந்தை, திருவள்ளுவா் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளா் முரளி பாலுசாமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் கரிகாலன், அதிமுக சிறுபான்மையினா் அணி மாவட்டச் செயலாளா் சாதிக்பாஷா, முன்னாள் இலக்கிய அணி மாவட்ட பொருளாளா் சுமங்கலி ரமேஷ்பாபு, மாவட்ட மாணவா் அணி இணைச் செயலாளா் சுதாகா், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் சிவசிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.