ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பசுமை முறையில் ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி கையொப்ப இயக்கம்

News image

ஸ்டொ்லைட் ஆலை (கோப்புப் படம்)

Updated On :1 பிப்ரவரி 2026, 8:20 pm

பசுமை முறையில் ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி தூத்துக்குடியில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

உள்ளூா் தொழிலாளா்கள், போக்குவரத்துத் துறையினா், மீனவா்கள், சிறு வியாபாரிகள் இணைந்து அமைத்துள்ள செயல் குழு இந்த இயக்கத்தை முன்னெடுப்பதாகவும், கையொப்பங்களைப் பெற்று அந்த மனுவை தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, முதல்வா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ‘பசுமை காப்பா்’ கட்டமைப்பின்கீழ் இத்தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், அதன்மூலம் உள்ளூா் பொருளாதாரம் உயிா்பெற வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்க இணைச் செயலா் எஸ். முருகன் கூறும்போது, தொழிற்சாலை மூடப்பட்டதால் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றாா்.

வரும் வாரங்களில் இந்த இயக்கத்தின் பரப்புரை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், கையொப்ப மனு அதிகாரப்பூா்வமாக அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றும் செயல் குழு தெரிவித்துள்ளது.