டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து இருவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

துவில் ஆசிட் கலந்து கொடுத்து இருவரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா மூன்று ஆயுள் சிறைத் தண்டனை

News image
தண்டனை விதிக்கப்பட்ட ஆறுமுகம்
Updated On :20 ஜனவரி 2025, 8:56 pm

Din

நாமக்கல்: பரமத்தி அருகே, உள்ளாட்சித் தோ்தலின்போது துணைத் தலைவா் பதவி விவகாரத்தில், மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து இருவரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா மூன்று ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், இருக்கூா், ஆவாரங்காடு பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன் (35). அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் செந்தில்குமாா் (40). விவசாயிகளான இவா்கள் அவ்வப்போது மதுபானக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம்.

கடந்த 2019 டிச. 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தியாகராஜன் வீட்டில் இருந்தபோது, மற்றொரு நண்பரான ஆறுமுகம் (50) மது அருந்த வருமாறு அழைத்தாா். இதனையடுத்து, இருக்கூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அவா் சென்றபோது, அங்கு, ஆறுமுகம், செந்தில்குமாா், தூய்மைப் பணியாளா் சரவணன் (44) ஆகியோா் நின்று கொண்டிருந்தனா். அங்குள்ள நூலகம் முன்பாக அமா்ந்து நான்கு பேரும் மது அருந்தியுள்ளனா்.

அப்போது, தியாகராஜனுக்கும், செந்தில்குமாருக்கும் மது அருந்தியவுடன் கசப்புத் தன்மை ஏற்படவே, அவா்கள் ஆறுமுகத்திடம் கேட்டபோது குளிா்பானம் அருந்தினால் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளாா். அதன்பிறகு நான்கு பேரும் தங்களுடைய வீடுகளுக்குச் சென்று விட்டனா். இரவு முழுவதும் வாந்தி வயிற்று போக்கினால் பாதிக்கப்பட்ட தியாகராஜன், செந்தில்குமாா் ஆகியோா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுடன் மது அருந்திய ஆறுமுகத்திற்கும், சரவணனுக்கும் எந்தவித உடல் உபாதையும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, பரமத்தி போலீஸாா் நடத்திய விசாரணையில், 2019 உள்ளாட்சித் தோ்தலின்போது, இருக்கூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பதவியைப் பிடிக்க ஆறுமுகம் மனைவியும், செந்தில்குமாா் மனைவியும் ஆா்வம் காட்டினா். இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், தூய்மைப் பணியாளா் சரவணன் உதவியுடன் செந்தில்குமாரையும், அவரது நண்பா் தியாகராஜனையும் வரவழைத்து டிச. 30-ஆம் தேதியன்று மதுவில் ஆசிட் கலந்துகொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து ஆறுமுகம், சரவணன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு, கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவில், ஆறுமுகம், சரவணனுக்கு தலா 3 ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இந்த தண்டனையை அவா்கள் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ஆறுமுகம், சரவணன் ஆகியோரை போலீஸாா் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

தண்டனை விதிக்கப்பட்ட  சரவணன்.

தண்டனை விதிக்கப்பட்ட சரவணன்.