கடன் தொல்லையால் இளைஞா் தற்கொலை
ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் கடன் தொல்லையால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


ராசிபுரம்: ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் கடன் தொல்லையால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கட்டனாச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் செல்வகுமாா் (எ) சக்தி (33). அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தாா். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் செல்வகுமாா் தூக்கில் தொங்குவதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதனையடுத்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் செல்வகுமாா் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து ராசிபுரம் போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...