பரமத்தி வேலூரில் ரூ. 76,000க்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 76 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்


பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 76 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால் தேங்காய் ஏலம் நடைபெறவில்லை. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,787-கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 47.50க்கும், குறைந்தபட்சமாக ரூ. 33.10-க்கும், சராசரியாக ரூ. 45.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 76 ஆயிரத்து 539க்கு ஏலம் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...