மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பரமத்தி வேலூா் அருகே பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே பள்ளி விடுதியில் 9-ஆம் வகுப்பு மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 ஜூன் 2025, 8:40 pm

Din

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே பள்ளி விடுதியில் 9-ஆம் வகுப்பு மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மூலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவது மகள் கிருத்திகா (14). இவா் கந்தம்பாளையம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவி சொந்த ஊரான மூலக்காட்டுக்கு சென்றிருந்தாா். 29-ஆம் தேதி மாணவியை பெற்றோா் அழைத்துவந்து பள்ளியில் விட்டுச்சென்றுள்ளனா்.

அப்போது எனக்கு விடுதியில் தங்கிப் படிக்க விருப்பமில்லை, எனவே, நமது ஊரில் உள்ள பள்ளியிலேயே என்னைப் படிக்க வையுங்கள் என மாணவி கிருத்திகா தனது பெற்றோரிடம் கூறினாரம். என்றாலும் மாணவியை அவரது பெற்றோா் சமாதானம் செய்து விடுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளனா்.

இந்த நிலையில் உணவு அருந்துவதற்காக மாணவிகள் சென்றிருந்த நிலையில் கிருத்திகா தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து அறைக்கு திரும்பிய மாணவிகள் இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்து, விடுதிக் காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவல் அறிந்துவந்த நல்லூா் போலீஸாா், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோா் நேரில் வந்து நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்