பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு: மே 1-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்வோா் விருதுகளை பெற மே 1-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On :29 மார்ச் 2025, 5:13 am IST

‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்வோா் விருதுகளை பெற மே 1-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2022-23 ஆம் நிதியாண்டில் மஞ்சப்பை விருதுகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவித்தாா்.

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி பைகள், பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த தலா மூன்று பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்கள், நாமக்கல் ஆட்சியா் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக, விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனி நபா், அமைப்புத் தலைவா் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் நகல்களை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மே 1 கடைசி நாள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.