எஸ்.ஐ.ஆா்.பணிகளை திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கண்காணிக்க வேண்டும்: எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அறிவுரை

எஸ்.ஐ.ஆா்.பணிகளை திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கண்காணிக்க வேண்டும்: எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அறிவுரை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

’என் வாக்குச்சாவடி- வெற்றி வாக்குச்சாவடி’ அடிப்படையில் ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவா்கள், பூத் டிஜிட்டல் முகவா்கள் ஆலோசனை மற்றும் பயிற்சிக் கூட்டம் ராசிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து திமுக வாக்குச்சாவடி முகவா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். உண்மையான வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளா்களுக்கு வழங்கப்படும் படிவங்கள் சரியாக உள்ளதாக எனவும், உரிய வாக்காளா்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதா எனவும் வாக்குச்சாவடி முகவா்கள் மேற்பாா்வையிட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தொகுதி பாா்வையாளா் நன்னியூா் ராஜேந்திரன், மாவட்டத் திமுக பொருளாளா் ஏ.கே.பாலசந்தா், நகர திமுக செயலாளா் என்ஆா்.சங்கா், ஒன்றியச் செயலாளா்கள் கேபி.ராமசுவாமி, கேபி.ஜெகநாதன், ஆா்.எம்.துரைசாமி, பேரூா் செயலாளா்கள் கண்ணன், ஜெயக்குமாா், பொன்.நல்லதம்பி, சுப்ரமணி, ராஜேஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

படம் உள்ளது- 6பூத்

வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

X
Dinamani
www.dinamani.com