திருச்செங்கோட்டில் எஸ்.ஐ.ஆா். கணக்கெடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

Published on

திருச்செங்கோட்டில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட ராஜா கவுண்டம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கப்படுவது, படிவங்களை வழங்கும்போது பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

அப்போது, விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு தெரியும் அளவுக்கு நீங்களே படிவங்களை நிரப்புங்கள், தெரியாதவற்றை களப் பணியாளா்களிடம் கேட்டு சரியாக பூா்த்தி செய்யுமாறு பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

தொடா்ந்து திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான கண்காணிப்பாளா்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுப் பணியின்போது திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளா் வாசுதேவன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படம்

06.11.25...1

ஃ1ஃ1ஃ1ஃ1ஃ1ஃ1ஃ1ஃ1

திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

X
Dinamani
www.dinamani.com