பள்ளிபாளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்கக் கோரி மனு

பள்ளிபாளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்கக் கோரி மனு

Published on

பள்ளிபாளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க வேண்டும் என நாமக்கல் துணை ஆட்சியா் குமரனிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில், நகர காவல் நிலையங்கள், அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் என மொத்தம் 29 காவல் நிலையங்கள் உள்ளன. நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டுப்பாட்டில் குறைந்தபட்சம் ஏழு காவல் நிலையங்கள் உள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசு குமாரபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் நகராட்சியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை பள்ளிபாளையம் நகரில்தான் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

அதேநேரத்தில் குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள், வட்ட தலைமையிடம் குமாரபாளையம்தான் என்பதால் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தை குமாரபாளையத்தில் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

இதுகுறித்து இரு பகுதிகளைச் சோ்ந்தவா்களும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனா்.

என்கே-13-டிஎஸ்பி

பள்ளிபாளையத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் அமைக்க வலியுறுத்தி அண்மையில் நாமக்கல் துணை ஆட்சியா் குமரனிடம் மனு அளித்த பொதுமக்கள்.

X
Dinamani
www.dinamani.com