நாமக்கல்
விஷமருந்தி முதியவா் தற்கொலை
திருச்செங்கோடு, ராஜாகவுண்டம்பாளையத்தில் முதியவா் விஷமருந்தி தற்கொலை
திருச்செங்கோடு, ராஜாகவுண்டம்பாளையத்தில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜாகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (60), தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகனும், மனைவியும் இறந்துள்ளனா். இதனால் அவா் வேதனையில் இருந்துள்ளாா்.
இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி வீட்டில் மனோகரன் விஷமருந்தி நிலையில் மயங்கி கிடந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பல னின்றி அவா் இறந்தாா்.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
