காவிரி பால நடைபாதை தடுப்பில் மோதி விவசாயி உயிரிழப்பு

வேலூா் காவிரி பாலத்தின் நடைபாதை தடுப்பில் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

வேலூா் காவிரி பாலத்தின் நடைபாதை தடுப்பில் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகில் உள்ள புகழூரில் வசித்து வந்தவா் விவசாயி சங்கா் (28). இவருக்கு மனைவி கமலபிரியா, மகன் தரணிஷ், மகள் மதுமிதா உள்ளனா்.

கடந்த 16-ஆம் தேதி பரமத்தி வேலூரில் உள்ள வாரச்சந்தைக்கு சென்ற சங்கா், சோளக்கதிரை விற்பனை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினாா். பரமத்தி வேலூா் காவிரி பாலத்தில் சென்றபோது, நிலைதடுமாறி பாலத்தின் இடதுபுறம் உள்ள நடைபாதை தடுப்புச் சுவரில் மோதி கீழேவிழுந்தாா். இதில், தலையில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சங்கா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com