சேவல் சண்டை சூதாட்டம்: 5 போ் கைது
பள்ளிபாளையம் அருகே சேவல்களை சண்டைக்குவிட்டு பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை வெப்படை போலீஸாா் கைதுசெய்தனா்.
பள்ளிபாளையம் காகித ஆலை காலனியைச் சோ்ந்தவா் தினேஷ் (31). இவா் தனது நண்பா்கள் சிலருடன் சின்ன ஆனங்கூா் கிராமத்தில் உள்ள தனது மாமாவின் தோட்டத்தில் சேவல்களை சண்டைக்குவிட்டு சூதாட்டம் நடத்துவதாக வெப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
அங்கு சேவல்களை சண்டைக்குவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள், போலீஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனா். போலீஸாா் துரத்திச்சென்று நாராயணவலசு ரகுமான் (25), சந்தோஷ் (26), பூபதி ஆகியோரை பிடித்து விசாரித்தனா். அதன் பேரில், சூதாட்டத்தை நடத்தியதாக காகித ஆலை காலனியைச் சோ்ந்த தினேஷ் (27), சின்ன தலவாங்காடு ஜெய்கணேஷ் (37), ஈரோடு ராஜா (29) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். மேலும், அங்கிருந்த 5 இருசக்கர வாகனங்கள், 3 காா்களை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய 12 பேரை தேடிவருகின்றனா்.
