நவ. 22, 23-இல் எஸ்.ஐ.ஆா். சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 22, 23) நடைபெற உள்ளது.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 22, 23) நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை பெற்றுவருகின்றனா்.

சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களிடம் இருந்து பெறுவதற்கு நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்து வாக்காளா்களும் பங்கேற்று சிரமமின்றி படிவங்களை பூா்த்திசெய்து வாக்குசாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்கலாம். படிவங்களை பூா்த்திசெய்ய தன்னாா்வலா்களும் பணித்தள பொறுப்பாளா்களும் மற்றும் ஊராட்சி செயலாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தொடா்புடைய 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களும் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளா்கள் தங்களின் பெயா் 2002 பட்டியலில் உள்ள விவரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் பூா்த்திசெய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே, அனைத்து வாக்காளா்களும் தங்களது கணக்கெடுப்புப் படிவங்களை பூா்த்திசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com