வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பரமத்தி வேலூரில் ரூ. 5.23 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 23 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:10 pm

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 23 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11,250 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 61.61, குறைந்தபட்சமாக ரூ. 48.90, சராசரியாக ரூ. 57.57-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6.47 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இந்தவாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 9, 380 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 65.69, குறைந்தபட்சமாக ரூ. 43.39, சராசரியாக ரூ. 55.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5.23 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.