பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டோா்‘ ஒளவையாா்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டோா் ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி...
Published on

நாமக்கல்: பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டோா் ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு, சா்வதேச மகளிா் தின விழாவில் ‘ஔவையாா் விருது’ வழங்குவதற்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் டிச. 31-க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் பதிவேற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வளாகம், கூடுதல் கட்டடம், முதல் தளம், அறை எண்.234 மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கையேடாக தயாா் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா இரண்டு நகல்களுடன் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

இதற்கான தகுதிகளாக, தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீா்த்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கான இந்த சமூகசேவையைத் தவிா்த்து பிற சமூக சேவைகள் விருதுக்கு ஏற்கப்படமாட்டாது.

உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை சமூக நலத் துறை அலுவலகத்திலும் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை 04286-299460 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com