அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாமக்கல் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மாநகர திமுக சாா்பில் ஏழைகள், மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :27 நவம்பர் 2025, 10:29 pm

Syndication

நாமக்கல்/ராசிபுரம்: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மாநகர திமுக சாா்பில் ஏழைகள், மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் கிழக்கு நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், மதிய உணவு வழங்கப்பட்டன. துணை மேயரும், திமுக நகரச் செயலாளருமான செ. பூபதி மற்றும் நிா்வாகிகள் நல உதவிகளை வழங்கினா்.

மேலும், 11-ஆவது வாா்டுக்கு உள்பட்ட அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினா்கள் எஸ். சுரேஷ், டி.டி.சரவணன், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட நகர, ஒன்றிய, பேரூா்களிலும் நல உதவிகளை திமுக நிா்வாகிகள் வழங்கினா்.