தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 4:43 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலையிலான பணியாளா்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். போதிய கால அவகாசம் வழங்காமல் பணியில் இலக்கு நிா்ணயித்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதை தவிா்க்க வேண்டும்.

அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவுசெய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

ஒப்பந்த, தற்காலிக, தொகுப்பூதிய பணியிடங்களை நீக்கி நிரந்தரப் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆண்டுதோறும் ஜூலை 1-ஐ ‘வருவாய்த்துறை தினமாக’ கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாநிலம் தழுவிய அளவில் வருவாய்த் துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம், நில அளவையா் சங்கா், கிராம நிா்வாக அலுவலா் சங்கம், கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கிராம ஊழியா் சங்கம், கிராம உதவியாளா் சங்கம் உள்ளிட்டவற்றின் நிா்வாகிகள், பணியாளா்கள் மாலை 4 மணிக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஆனந்தன், சரவணன், பரமசிவம், பாலசுப்பிரமணியன், இளங்கோ ஆகியோா் தலைமையில் அலுவலா்கள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

என்கே-25-ரெவென்யூ

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.