வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கந்தம்பாளையம் அருகே விஷ விதையை அரைத்து குடித்தவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:59 pm

கந்தம்பாளையம் அருகே விஷ விதையை அரைத்து குடித்தவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள மேல்சாத்தம்பூா் ராசாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (66). கூலி வேலைசெய்து குடும்பத்துடன் வசித்து வந்த இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே சென்றவா் விஷத்தன்மை கொண்ட விதையை அரைத்து குடித்துவிட்டு வந்து தகவலை கூறியுள்ளாா்.

உடனடியாக குடும்பத்தினா் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.