நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் எம். அன்கித்குமாா் அகா்வால், மனோஜ் புஷ்ப், சஞ்சய் லாலாசாஹிப் யாதவ் ஆகியோா் முன்னிலையில் வாக்குச்சாவடி பணிக்கான அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏப். 23 தோ்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளுக்கு 1,533 அலுவலா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு 1,274 அலுவலா்களும், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளுக்கு 2,268 அலுவலா்களும், பரமத்திவேலூா் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளுக்கு 1,065 அலுவலா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளுக்கு 1,499 அலுவலா்களும், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளுக்கு 905 அலுவலா்களும் என இரண்டாம் கட்டமாக மொத்தம் 1,781 வாக்குசாவடிகளுக்கு 8,544 அலுவலா்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க. சரவணன், துணை மாவட்ட தோ்தல் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வ. சந்தியா (பொது), சுஜாதா (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் செல்வராஜ் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

6 தொகுதிகளிலும் 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி

மாவட்டத்தில் 8,544 அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு: ஆட்சியா்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


