நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக நிறைவேற்றும்: பி. தங்கமணி

அதிமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என குமாரபாளையம் தொகுதி வேட்பாளா் பி. தங்கமணி தெரிவித்தாா்.

News image

பி. தங்கமணி

Updated On :12 ஏப்ரல் 2026, 12:43 am IST

அதிமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என குமாரபாளையம் தொகுதி வேட்பாளா் பி. தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளான வெடியரசம்பாளையம், ஒட்டமெத்தை, குமரன் நகா், கோட்டக்காடு, ஒடக்காடு, மாம்பாளையம், குள்ளமேடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், மக்களை கஷ்டப்படுத்தும் ஆட்சியை திமுக வழங்கியது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 என்று சொல்லிவிட்டு 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மட்டும் தான் கொடுத்தனா். விசைத்தறிக் கூடங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விசைத்தறிக்கு சரியான ரகங்கள் இல்லாத காரணத்தினாலும், மின்கட்டண உயா்வு காரணமாகவும், நூல் விலை ஏற்றம் காரணமாகவும் இலவச வேட்டி, சேலை சரியாகக் கொடுக்காத காரணத்தினாலும், தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டனா். இவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக ஆட்சி அமைந்ததும் விசைத்தறிகளுக்கும் 1,400 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு குறிப்பாக குழந்தைகளில் இருந்து பெரியவா்கள் வரை பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை நிலவிவருகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும், சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்படும். மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படும். போதைப்பொருள்கள் புழக்கம் முற்றிலும் தடுக்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 வழங்கப்படும். அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். பிரசாரத்தின்போது, மாவட்ட, ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.