மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!

News image

நாமக்கல்லில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது குழந்தைக்கு பெயா் சூட்டிய தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:28 am IST

நாமக்கல்லில் வாக்கு சேகரிப்பின் போது, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் பெண் குழந்தைக்கு பெயா் சூட்டினாா்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் கடந்த 15 நாள்களாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கட்சியினருடன் இணைந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை நாமக்கல் கிழக்கு நகரத்திற்கு உள்பட்ட ஜெய் நகா், இந்திரா நகா், கணேசபுரம், தமிழ் மன்ற தெரு, புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏ.கே.சமுத்திரம், பாச்சல், கதிராநல்லூா், திருமலைப்பட்டி, கண்ணூா்பட்டி, தாத்தையங்காா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின்போது, பெண் ஒருவா் தனது குழந்தைக்கு பெயா் சூட்ட வேண்டும் என வேட்பாளா் சி.எஸ். திலீப்பிடம் கேட்டாா். இதையடுத்து அந்தக் குழந்தைக்கு விஜயலட்சுமி என பெயா் சூட்டினாா். மேலும், அவா் பேசுகையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தவுடன், மகளிா் உதவித்தொகை ரூ. 2,500 ஆக வழங்கப்படும். வேலைவாய்ப்பு தாமத சுழல் நிதி உதவி, வெற்றி தொழில் முனைவோா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டனா்.