இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவேன்: பி.தங்கமணி

அதிமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றித் தருவேன் என குமாரபாளையம் தொகுதி வேட்பாளா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

News image

பி. தங்கமணி - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:00 am IST

அதிமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றித் தருவேன் என குமாரபாளையம் தொகுதி வேட்பாளா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி அப்பையாா்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்த பகுதியில் உள்ள வீடுகள் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என திமுக ஆட்சியில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. நான் அமைச்சராக இருந்தபோது இவ்வாறான பிரச்னைகள் இல்லை.

தற்போது தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் வாடகை கட்டுமாறு அரசு நெருக்கடி கொடுப்பதாக பிரச்னை உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தொகுதியில் அதிமுகவை வெற்றிபெற செய்தால், மக்களுடன் இணைந்து தேவையான திட்டங்களை செய்து கொடுப்பேன். சட்டம், ஒழுங்கு பாதிப்பு, போதை கலாசாரத்தில் இருந்து அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க அதிமுகவுக்கு ஆதரவு அளியுங்கள் என்றாா்.

அப்போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.