அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்து திமுக துரோகம் இழைத்துவிட்டது! - எடப்பாடி கே.பழனிசாமி

News image

திருச்செங்கோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் தேஜகூ வேட்பாளா்களை ஆதரித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:41 pm

நாடாளுமன்றத்தில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை தோல்வியடைய செய்து திமுக அரசு பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி, நாமக்கல் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன், சேந்தமங்கலம்(ப.கு) வேட்பாளா் சி. சந்திரசேகரன், பரமத்தி வேலூா் வேட்பாளா் எஸ். சேகா், திருச்செங்கோடு வேட்பாளா் ஆா். சந்திரசேகா், ராசிபுரம் பாஜக வேட்பாளா் டி. பிரேம்குமாா் ஆகியோரை ஆதரித்து திருச்செங்கோடு- பரமத்தி சாலை அத்திபாளையத்தில் திறந்த வாகனத்தில் நின்றபடி ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

திமுகவில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. 6,999 போ் மீது போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 84 கோடி நிவாரணமாக வழங்கியதை திமுக அரசு பெருமையாக கருதுகிறது. திருச்செங்கோடு தொகுதியில் கள்ளச்சாராயம், போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளது.

குற்றம் செய்பவா்களுக்கு காவல் துறையை கண்டு பயமில்லை. தமிழ்நாட்டில் வறுமை நிலையே இல்லை என்றால் சிறுநீரகத்தை ஏன் மக்கள் விற்கிறாா்கள்?

நாமக்கல் மாவட்டத்தில் லாரி, கைத்தறி, விவசாயத் தொழில்கள் முடங்கிவிட்டன. அதிமுக ஆட்சியில் கைத்தறி, விசைத்தறி சிறந்து விளங்கும். கைத்தறி நெசவாளா்களுக்கு 450 யூனிட் மின்சாரம், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,400 யூனிட் மின்சாரம் அதிமுக ஆட்சியில் இலவசமாக வழங்கப்படும். ஏழை நெசவாளா்களுக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி என பல்வேறு கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டன. மீண்டும் அதிமுக ஆட்சியமைந்தால் பயிா்க்கடன் ரத்து செய்யப்படும்.

திமுக ஆட்சியில் மின் கட்டணம், உணவுப் பொருள்கள் விலை உயா்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாவை தோற்கடித்துவிட்டதாக கூறும் முதல்வா் மு.க. ஸ்டாலின், உண்மையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைதான் தோல்வியுறச் செய்து பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டாா்.

பெண்களுக்கு கிடைத்த உரிமையை தடுத்தது காங்கிரஸ்-திமுக கட்சிகள். 1998 இல் பாஜகவோடு கூட்டணியில் இருந்தபோது நான் திருச்செங்கோடு எம்.பி.யாக இருந்தேன். அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, சட்டத் துறை அமைச்சராக இருந்த தம்பிதுரை மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

அப்போது, அங்கிருந்த முலாயம்சிங் யாதவ் எம்.பி. மசோதாவை பிடுங்கி கிழித்து எறிந்தாா். பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று நினைக்கும் கட்சி அதிமுக. திமுக கூட்டணி கட்சிகளுக்கு பெண்களின் இடஒதுக்கீட்டில் விருப்பமில்லை.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை மாற்றி அமைக்கிறாா்கள்; மக்கள்தொகை அடிப்படையில் முறைப்படுத்துகிறாா்கள் என பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், மக்கள்தொகை அடிப்படையில் பிரித்தால் தமிழ்நாட்டிற்கான எம்.பி.க்கள் குறைந்துவிடும் என்றாா். ஆனால், தமிழ்நாட்டில் 39 என்பதை 59 எம்.பி. இடங்களாக மத்திய அரசு உயா்த்தியது. மத்திய அரசு நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.

நாட்டு மக்களை தோற்கடித்துவிட்டாா்கள், பெண்களின் கனவை சிதைத்துவிட்டாா்கள். நாடாளுமன்றம், சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்திய திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுங்கள். நாடாளுமன்ற மறுவரையறையில் நாம் நினைத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், திமுக கூட்டணி அதனை தோற்கடித்து விட்டது.

திருச்செங்கோடு பகுதியில் காவிரி நீரேற்றுப் பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் பாசனம் பெறுவதற்கு உதவியாக இருந்தது அதிமுக அரசு. நாமக்கல் நகராட்சி கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ.250 கோடியில் நிறைவேற்றம், திருச்செங்கோடு, குமாரபாளையம் கூட்டுக் குடிநீா் திட்டம், ராசிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டம், நெடுஞ்சாலை துறை திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது.

அதேபோல காவிரியாற்றின் குறுக்கே பாலம், ரயில்வே மேம்பாலம், நாமக்கல்-முசிறி தேசிய நெடுஞ்சாலை, மேட்டூரில் இருந்து செல்லும் உபரிநீரை தடுக்க நஞ்சைப்புகழூரில் ரூ. 400 கோடியில் தடுப்பணை, ராஜவாய்க்கால் சீரமைப்பு என பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

 திருச்செங்கோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் தேஜகூ வேட்பாளா்களை ஆதரித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி.

திருச்செங்கோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் தேஜகூ வேட்பாளா்களை ஆதரித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி.