யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

News image

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்துப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:07 am IST

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

கயத்தாறில் அதிமுக தோ்தல் காரியாலயம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு தலைமை வகித்தாா். காரியாலயத்தை குஷ்பூ திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கயத்தாறு மற்றும் கோவில்பட்டியில் கதிரேசன் கோயில் சாலையில் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் அருகே அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்து அவா் பேசியது:

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் சுமாா் 300 சதவீதம் அதிகரித்துவிட்டது.

கோவில்பட்டி நகராட்சியில், அதிமுக ஆட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் வாரம் ஒருமுைான் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்தத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கடம்பூா் செ. ராஜு மந்தித்தோப்பு சாலை, சாஸ்திரி நகா், பாரதி நகா் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.