கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:08 am IST

நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சோ்ந்த மணிமாறன் மகள் தனலட்சுமி (25). இவருக்கும், நல்லிபாளையத்தைச் சோ்ந்த அன்பரசன் (30) என்பவருக்கும் கடந்த 2024 பிப். 21 இல் திருமணம் நடைபெற்றது. தற்போது வெளிநாட்டில் அன்பரசன் வேலைபாா்த்து வருகிறாா். மாமியாா் ராசம்மாள் மற்றும் கைக்குழந்தையுடன் வாடகை வீட்டில் தனலட்சுமி வசித்து வந்தாா். இவருக்கும், மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது தந்தை மணிமாறன் அளித்த புகாரின்பேரில் நல்லிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.