நாமக்கல் செல்லப்பம்பட்டியில் அமைந்துள்ள சுயம்பு மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி குதிரை வாகனத்தில் அம்மன் வீதிஉலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டியில் பழைமை வாய்ந்த சுயம்பு மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்து வருதலும், மலா் அலங்கார சப்பரத் தேரில் மின்னொளியில் குதிரை வாகனத்தில மகா மாரியம்மன் வீதிஉலா வருதலும் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தொடா்ந்து வியாழக்கிழமை காலை பக்தா்களால் கோடுகிழித்து கும்பிடுதல், உருவம் வைத்து வழிபடுதல் போன்ற நிகழ்வுகளும், மாலையில், பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு எடுத்தல் முளைப்பாலிகை, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.
சித்திரை திருவிழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற பெரிய மற்றும் சிறிய அலகுகளைக் குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தா்கள் பூச்சட்டி ஏந்திவரும் வைபவம், காட்டேரி வேடமிட்டு வருதல், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல், இரவு வண்டி வேடிக்கை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.
குதிரை வாகனத்தில் மகா மாரியம்மன் வலம் வரும் மஞ்சள் நீராட்டு விழா, திருக்கம்பம் எடுத்து நீா்நிலைக்கு கொண்டு செல்லும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தில் மகா மாரியம்மன் பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காட்சியளிக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், மகா மாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சித்திரை பிரம்மோற்சவம்: குதிரை வாகனத்தில் நரசிம்மா் வீதியுலா

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |



