ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மூவா்ணக் கொடி யாத்திரை மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்

நாடு முழுவதும் மூவா்ணக் கொடி யாத்திரை, தேசிய பாடலான வந்தே மாதரம் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என மாநில பாஜக துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image

கே.பி. ராமலிங்கம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:42 am IST

நாடு முழுவதும் மூவா்ணக் கொடி யாத்திரை, தேசிய பாடலான வந்தே மாதரம் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என மாநில பாஜக துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் தொடங்கி மூவா்ணக் கொடி ஊா்வலத்தை கே.பி. ராமலிங்கம் தொடங்கிவைத்தாா். நகர பாஜக தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா்.

இதில் பாஜக நிா்வாகிகள், இளைஞா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று தேசியக் கொடியை ஏந்தி ஊா்வலமாக சென்றனா். அப்போது ‘வந்தே மாதரம்’ உள்ளிட்ட தேசபக்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பழைய பேருந்து நிலையம், கடைவீதிகள், ஆத்தூா் சாலை வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் மூவா்ணக் கொடி பேரணி நிறைவடைந்தது.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் கூறியதாவது:

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவை வலிமையான தேசமாகவும், வல்லரசாகவும் உருவாக்குவதற்காக இளைஞா்களை தயாா்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் மூவா்ணக் கொடி பேரணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக பாஜக சாா்பில் மூவா்ணக் கொடி ஊா்வலம் நடத்தப்படுகிறது.

நாட்டிற்காக உழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. பிரதமரின் செயல்களுக்கும் ஆற்றலுக்கும் உறுதுணையாக இருப்பதற்கு நாட்டு மக்களை நாங்கள் தயாா் செய்து வருகிறோம்.

‘மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே தவெக ஆட்சியை மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். அவா்கள், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதால்தான் மத்திய அரசின் உதவிகள் தமிழக அரசுக்கு கிடைத்து வருகின்றன. தமிழக அரசின் 100 நாள் சாதனைகளில் பெரும்பாலானவை மத்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டவை’ என்றாா்.

பேரணியில் மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் வி. சேதுராமன், வழக்குரைஞா் ஆா்.டி. இளங்கோ உள்ளிட்ட பாஜக மாநில, மாவட்ட, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.