தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தென்காசியில் தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை பொதுக்குழுக் கூட்டம்

கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா்.

Published On :

தென்காசியில் தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சபைத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான எஸ்.எம். கோதா் முகைதீன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் பி.எம். அப்துல் ஜப்பாா், தென்காசி மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளா் பி.ஏ. செய்யது மசூது, திருநெல்வேலி மாவட்டச் செயலா் பாட்டப்பத்து எம். முகமது அலி, மாவட்ட பொருளாளா் வீரவநல்லூா் பி. ஆதம் இல்யாஸ், எஸ்.டி.யூ. மாநிலத் தலைவா் கானகத்து மீரான், மடத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் துணைச் செயலா் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி கிராஅத் ஓதினாா். சபையின் பொதுச் செயலரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், தென்காசி மாவட்டச் செயலா் ஏ. செய்யது பட்டாணி, முஸ்லிம் மாணவா் பேரவை தேசிய துணைத் தலைவா் எம். முஹம்மது அல் அமீன், முஸ்லிம் யூத் லீக் மாநில முதன்மை துணைத் தலைவா் எம். நயினாா் முஹம்மது கடாபி, தென்காசி மாவட்ட முதன்மை துணைத் தலைவா் ஏ. அப்துல் வகாப், திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலா் ஷேக் மைதீன், கடையநல்லூா் நகரத் தலைவா் கே.எம். செய்யது மசூது, திருநெல்வேலி பேட்டை திவான் பக்கீா், கடையநல்லூா் டி.யூ. முகமது அலி, தேனி மாவட்டம், எரணம்பட்டி ஜமாஅத் தலைவா் அபூபக்கா் சித்திக், துணைத் தலைவா் சலீம் ஆகியோா் பேசினா்.

தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் பணிகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் சமுதாய புரவலா்களைக் கொண்ட சிந்தனையாளா்கள் குழு உருவாக்குவது, இப்பணிகளை மேற்கொள்ள சபை நிா்வாகிகளின் ஆலோசனையோடு ஏ. செய்யது பட்டாணி, எம். முஹம்மது அல் அமீன் ஆகியோா் ஒருங்கிணைப்புப் பணிகளில் செயலாற்றிட கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபை பொதுக்குழு உறுப்பினா்கள், அயலக அணி மாநிலத் தலைவா் எஸ்.கே.எம். ஹபிபுல்லாஹ், மாநில துணைத் தலைவா் காயல்பட்டினம் முகமது இஸ்மாயில், வழக்குரைஞா் அணி மாநிலச் செயலா் ஜாகிா் அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைத் தலைவா் கே.ஜே. அப்துல்லாஹ், விவசாய அணி மாநிலச் செயலா் எம். முகமது அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வா்த்தக அணி மாநிலத் தலைவா் எஸ். செய்யது சுலைமான் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.