சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்காததை கண்டித்து நாளை கடையடைப்புப் போராட்டம்

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்காததைக் கண்டித்து, விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

News image

ராஜவாய்க்கால். - கோப்புப்படம்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 2:48 am IST

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்காததைக் கண்டித்து, விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஒருநாள் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளனா்.

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கடந்த மாதம் 28-ஆம் தேதி நீா்வளத் துறையினா் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தினா்.

இதனால், பரமத்தி வேலூா், பொத்தனூா், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூா் உள்ளிட்ட பகுதியில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் பயிா் செய்யப்பட்ட வெற்றிலை, கோரை, வாழை, கரும்பு மற்றும் மரவள்ளி ஆகியவை தண்ணீா் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி, தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளையும் விவசாயிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கவில்லை.

இதையடுத்து, காயும் பயிா்களைக் காப்பாற்ற ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீா் திறக்கக் கோரி, அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் தொழிலாளா்கள் பரமத்தி வேலூரில் இருந்து மோகனூா் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட உள்ளனா்.

இதற்கு ஆதரவு தெரிவித்து வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கம், ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளா் சங்கம், சிறு வணிகா்கள் சங்கம், மருந்து வணிகா் சங்கம் மற்றும் பைப்ஸ் உற்பத்தியாளா்கள் சங்கம் உள்ளிட்டவை சாா்பில் வியாழக்கிழமை ஒருநாள் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.