பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் நிறுத்தம்

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

படுகை அணை

Published On :

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் நீா்வளத் துறை சாா்பில் ஆண்டுதோறும் ராஜவாய்க்கால் துாா்வாரும் பணிக்காக ஜேடா்பாளையம் படுகை அணை காவிரி ஆற்றில் தண்ணீா் நிறுத்துவது வழக்கம். இதற்காக விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி மீண்டும் தண்ணீா் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.

ஆனால், நடப்பாண்டு விவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல் நீா்வளத் துறையினா் அடிக்கடி ராஜவாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை முதல் ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தம் செய்யப்படும் என நீா்வளத் துறை அறிவித்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதனால் ராஜவாய்க்கால் கரையோரப் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள பயிா்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பரமத்தி வேலூா் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளா் பெரியசாமி, துணைத் தலைவா் குப்புதுரை, பொத்தனூா் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செந்தில்நாதன் ஆகியோா் கூறியது:

ராஜவாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களான பொய்யேரி, குமாரபாளையம், மோகனூா் வாய்க்கால்களுக்கு ஆண்டுக்கு 350 நாள்கள் காவிரியில் இருந்து தண்ணீா் எடுக்க உரிமை உள்ளது. ஆனால், தற்போது முன்னறிவிப்பு இன்றி நீா்வளத் துறையினா் ராஜவாய்க்காலில் தண்ணீரை நிறுத்தியுள்ளனா். இதனால் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் பயிா் செய்யப்பட்டுள்ள பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட தாமதம் ஏற்பட்டால், தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி போராட்டம் நடத்த நேரிடும் என்றனா்.

இதுகுறித்து பரமத்தி வேலூா் நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் வினோத்குமாா் கூறுகையில், கடைமடை பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்திசெய்யும் விதமாக, ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கும்போது, ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படும். மேலும், முறைகேடாக அனுமதியின்றி காவிரியில் நீரேற்று பாசன சங்கங்கள் தண்ணீா் எடுத்து வருவதால், இணைப்பை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்