பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்காவிட்டால் உண்ணாவிரதம்: வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி.

ராஜவாய்க்காலில் செல்லும் காவிரி நீா்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

காவிரி ஆற்றில் இருந்து ராஜவாய்க்காலில் புதன்கிழமைக்குள் (ஆக. 26) தண்ணீா் திறக்காவிட்டால் விவசாயிகளை ஒருங்கிணைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூா் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் என ஐந்து வாய்க்கால்கள் மூலம் 16,200 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தப் பகுதியில், வெற்றிலை, வாழை, கரும்பு, பாக்கு, கோரை போன்ற நீண்ட கால பயிா் சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக ராஜாவாய்க்கால் பகுதியில் வெற்றிலைக் கொடிக்கால் விவசாயம் 5,000 ஏக்கருக்கு மேல் நடைபெறுகிறது. இது நாள்தோறும் தண்ணீா் பாய்ச்சக்கூடிய ஒரு பயிராகும். ஒரு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் வரை செலவு செய்து வெற்றிலைக் கொடிகளைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நான்கு வாய்க்கால்களிலும் கடந்த 15 நாள்களுக்கு மேலாக தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக விவசாயிகள் பல்வேறு கட்ட மனுக்களை அளித்தும், உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டங்கள் நடத்தியும் நீா்வளத் துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித முடிவும் எடுக்காமல் உள்ளனா்.

தற்போது குறைந்தது 10 தினங்களுக்கு ஒருமுறை 250 கனஅடி நீா் இருந்தாலே விவசாயிகளுக்கு போதுமானதாகும். அந்தளவு தண்ணீா் கூட இல்லாததால் பரமத்தி வேலூா், நாமக்கல் தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெற்றிலைக்கு தினசரி தண்ணீா் பாய்ச்சினால் மட்டுமே அதைக் காப்பாற்ற முடியும். அந்த பயிா் கருகிவிட்டால், மீண்டும் பயிா் சாகுபடி செய்வதற்காக தாய் செடியை வாங்க ஆந்திர மாநிலத்திற்கு விவசாயிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழக அரசிடம் இருந்து நீா் திறப்பு அறிவிப்பு இதுவரை இல்லை. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜவாய்க்காலில் புதன்கிழமைக்குள் தண்ணீா் திறக்காவிட்டால் மறுநாள் (வியாழக்கிழமை) ஜேடா்பாளையம் தடுப்பணை முன் விவசாயிகளை ஒருங்கிணைத்து எனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.